Thursday, September 12, 2013

About the Temple

Locate the Temple at Google Map


அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில்

மூலவர்: செங்கழுநீர் அம்மன்

பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: வீராம்பட்டினம்

மாவட்டம்: புதுச்சேரி

மாநிலம்: புதுச்சேரி

திருவிழா

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும்.  
   
தல சிறப்பு

இங்கு அம்மன் தேவதாரு மரத்தால் ஆனவர்.  
   
திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  

முகவரி

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம் - 605 007, புதுச்சேரி மாவட்டம்.  
   
போன்: +91-413-260 0052  
   
பொது தகவல்

புதுச்சேரிக்கு தெற்கே வங்கக் கடற்கரையோரம் அமைந்திருக்கும் ஊர் வீராம்பட்டினம். இந்த ஊரில் தான் செங்கழுநீர் அம்மன் அருளாட்சி செய்கிறாள்.  
   
பிரார்த்தனை
   
"இந்த அம்மனை மனமுருகி வேண்டும் பக்தர்களின் அனைத்து குறைகளும் தீர்ந்து விடுகிறது. குறிப்பாக கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பவுர்ணமி தினத்தில் இங்கு வந்து தங்கி பிரார்த்தனை செய்தால் கண்பார்வை நிச்சயம் கிடைக்கும். மற்றும் குழந்தை பாக்கியத்திற்கும், திருண தடை நீங்கவும் இங்குள்ள கடலில் குளித்து விட்டு அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் நிச்சயம் பலன் உண்டு'' என்கிறார். 

நேர்த்திக்கடன்
   
அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
   
தலபெருமை
   
இங்கு தேர்த்திருவிழாவை புதுச்சேரி கவர்னர் தேர் வடத்தை இழுத்து விழாவை தொடங்கிவைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. இந்த செங்கழுநீர் அம்மனை பரதவர் இனமே வணங்கி வழிபட்டு மகிழ்ந்தது. பின்னர், தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட முழு உருவம் அமைக்கப்பட்டது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள பல பரம்பரைகள் செங்கழுநீர் அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். 

தல வரலாறு
   
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர். ஒரு நாள் காலை இவர் தன் தோளில் மீன்பிடிக்கும் வலையை சுமந்து, ஊருக்கு மேற்கேயுள்ள செங்கழுநீர் ஓடைக்கு சென்று மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார். காலையிலிருந்து வலை வீசி ஒரு மீன் கூட  கிடைக்காததால் வீரராகவர் கவலைப்பட்டார். கடைசி முறையாக ஓடையில் வலைவீசி இழுத்த போது, வலை கனமாக இருப்பதைக் கண்டார். வலை கனமாக இருப்பதால் சிக்கியிருப்பது மீன்தான் என்று நினைத்து சந்தோஷத்துடன்  இழுத்துக்கொண்டே வந்தார். ஆனால் சிக்கியிருந்தது மீனுக்கு பதில் உருண்டையான மரக்கட்டை. ஆண்டவன் இன்று நமக்கு அளித்த படி இது தான் என்று நினைத்தபடி இந்த மரக்கட்டடையை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லைப்புறத்தில் போட்டார்.

சில நாட்களுக்குப்பின் அடுப்பு  எரிப்பதற்காக விறகு இல்லாமல் போகவே வீரராகவரின் மனைவி வீட்டின் பின் புறத்தில் இருந்த மரக்கட்டையை உடைத்து உபயோகிக்க கோடாரியால் மரத்தை பிளக்க முயன்றார். மரத்துண்டின் மீது கோடாரி பட்டதும் மரக்கட்டை பிளக்கவில்லை. அதற்குப்பதில் கோடாரி பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. இதனால் வீரராகவரின் மனைவி பதறிப்போனார். இந்த செய்தியறிந்த அந்த ஊர் மக்கள் இந்த அதிசயத்தை வந்து கண்டனர்.   தகவலறிந்து வந்த வீரராகவரும் அந்த மரக்கட்டையை வீட்டினுள் எடுத்து வந்து சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்தார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் வீரராகவரின் வாழ்க்கை வளமையானது.

ஒரு நாளிரவு வீரராகவர் கனவு ஒன்று கண்டார். அந்த கனவில் அம்மன் தோன்றி அவரிடம் ""பக்தனே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீகம் பெற்ற ரேணுகை தான் நான். நான் அன்னை பராசக்தியின் அம்சம். இந்த பகுதி மக்கள் செய்த தவத்தின் பயனாக இங்கு கோயில் கொண்டு அருள் வழங்க வந்துள்ளேன். என் வருகையின் அடையாளமே, உன்னிடம் உள்ள மரத்துண்டு. எனவே நான் குறிப்பிடும் இடத்தில் அந்த மரத்துண்டை பீடமாக ஸ்தாபித்து, அதன் மேல் என் திருவுருவை விக்ரகமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. என் திருமேனியை பிரதிஷ்டை செய்ய நான் குறிப்பிடும் இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்து மறைந்த சித்தர்பீடம் ஒன்று உண்டு, அதுவே எனக்கேற்ற இடம், மேலும் என்னை "செங்கழுநீர் அம்மன் ' என்று அழையுங்கள் என்று கூறி விட்டு அன்னை ரேணுகை மறைந்தாள்.

மறுநாள் வீரராகவர் தான் கண்ட கனவை ஊர் மக்களிடம் கூறினார். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அம்மன் குறிப்பிட்ட இடத்தை தேடினர். அப்போது புதர் அடர்ந்த, பாம்பின் புற்று  வளர்ந்தோங்கிய இடம் ஒன்றை கண்டனர். ஊர்மக்களின் சத்தத்தால் புற்றிலிருந்து மிகப்பெரிய பாம்பு ஒன்று வெளிவந்தது. அது தனது படத்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை மூன்று தடவை அடித்து, விக்ரக பிரதிஷ்டை இடத்தை காண்பித்து விட்டு புற்றுக்குள் சென்று மறைந்தது. நாகம் குறிப்பிட்ட இடத்தை  தோண்டி சுத்தம் செய்தனர். அதன் மீது முன்பு வலையில் கிடைத்து, வீரராகவர் வீட்டில் இருந்த மரத்துண்டை பீடமாக அமைத்தனர். அதன் மேல் கழுத்துக்கு மேல் உள்ள அம்மனை எழுந்தருளச் செய்து, அதற்கு "செங்கழுநீர் அம்மன்'  என்ற திருநாமம் இட்டனர். 

சிறப்பம்சம்
   
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் தேவதாரு மரத்தால் ஆனவர்.

செல்லும் வழி

இருப்பிடம்: புதுச்சேரியிலிருந்து தெற்கே 8 கி.மீ துரத்தில் உள்ளது வீராம்பட்டினம். இந்த ஊருக்கு புதுச்சேரியிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஊரின் நடுவே கோயில் உள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது. 

அருகிலுள்ள ரயில் நிலையம்: புதுச்‌‌சேரி.

அருகிலுள்ள விமான நிலையம்: சென்னை மற்றும் புதுச்‌‌சேரி.

தங்கும் வசதி: புதுச்சேரி

ஆதித்யா +91413221 4146 48
ஜெயராம் +91413221 431416
மாஸ் +91413420 700110
சத்குரு +91413233 9022
அண்ணாமலை +91413224 700110 

About the Temple in English

Sri Sengazhuneer Amman temple

Moolavar: Sengazhuneer Amman
Old year: 500-1000 years old
City: Veerampattinam
District: Pondicherry
State: Pondicherry

Festival
   
Veerampattinam wears a festive grandeur look from the first Aadi Friday in July-August successively for six Fridays. The car festival takes place on the fifth Friday.  
   
Temple's Speciality

The idol of Ambica is made of Devadharu wood.  
   
Opening Time

The temple is open from 6.00 a.m. to 11.00 a.m. and from 4.00 p.m. to 9.00 p.m.  
   
Address

Sri Sengazhuneer Amman Temple, Veerampattinam, Puducherry district.  
   
Phone: +91-413-260 0052  
   
General Information

Veerampattinam, is situated on the sea shore south of Puducherry from where Sengazhuneer Amman is blessing devotees.

Prayers

Merciful Sengazhuneer Amman responds to every prayer of the devotees, those with impaired vision in particular. People also pray for wedding and child boons.  They bathe in the sea, offer abishek and archanas to Mother for desired results.

Thanks giving

Devotees offer vastras to Mother and contribute for temple renovation.  
   
Greatness of Temple

The car festival of the temple is inaugurated by the Governor of the Union Territory of Puducherry even today.  He is the first to hold the rope of the Rath. Ambica was the deity of the fishermen community once. Then an idol was made of Devadharu wood. Today, many families in Puducherry and Tamil Nadu worship Sengazhuneer Amman as their family deity.

Temple History

About 450 years ago, a pious fisherman Veera Raghavan set out for fishing with his net and spread it on the Sengazhuneer canal.  He was sad that he had no catch till sunset.  He made a final attempt and found the net heavy.  He thought he had a big catch but was disappointed to see it was but a log.  He took it home and placed it in the back yard of his house.  One day, his wife tried to cut it to pieces for firewood.  The log was heavy to break but it began to bleed from spot where the axe fell on it.  Shocked, she informed the matter to her husband and people of the village.

Veera Raghavan took the log into house and performed pujas with sandal, kumkum etc.  His life became bright and prosperous from that day.

Mother Ambica appeared in the dream of Veera Raghavan and told him that she was the divine Renuka with the powers of Mother Shakti.  The log in his house was the indication of Her arrival.  Mother said that the log should be used as the peeta and install Her idol and continue the worship.  She also said that there was a place where a Siddha lived thousands of years ago where the temple should be built.  She also directed the fisherman to name Her Sengazhumneer Amman.

Veera Raghavan informed the villagers of his dream.  All set out to find the place indicated by Amman.  They found an anthill from where a serpent came out, beat the ground thrice with its hood, thus showing them the place where they had to install the deity.  The wood in the fisherman’s house was brought for setting the peeta.  They made a burst idol of Ambica, installed it for regular worship.  They named Her Sengazhuneer Amman.

Special Features

Miracle Based: The idol of Ambica is made of Devadharu wood. 

Path

Location: Veerampattinam is 8 km south of Puducherry linked with frequent bus facility. The temple is in the heart of the place and is easily reachable. 

Near By Railway Station: Puducherry.

Near By Airport: Chennai and Puducherry.  

Accomodation: Puducherry

Aditya: +91-91-413-221 4146 to 48
Jayaram: +91-413-221 4314
Mass: +91-413-420 7001 to 10
Sadguru: +91-413-233 9022
Annamalai: +91-413-224-7001 to 10.


Courtesy_


No comments: